"அரசின் பண்டிகைக்கால சலுகை வேலைத்திட்டம்"
சமகாலமாக அரிசி மற்றும் தேங்காய்களின் விலைகளில் சடுதியாக ஏற்பட்ட மாற்றத்தினை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் என அதன் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு நேற்று அரிசி மற்றும் தேங்காய் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், ஒரு வாடிக்கையாளர் 5 கிலோ நாட்டு அரிசி மற்றும் 3 தேங்காய்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது..
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி