"பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பணவு"
பிறக்கவிருக்கும் புதிய ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 55% மான மாணவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் அதிகமான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி