"ஆசிரியர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன"
வடமத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆசிரியர்களாக சேவையில் சேரும் போது சமர்ப்பித்த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக பிரதம அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997ஆம் ஆண்டு தொடக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றுவதற்காக அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 14 பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சேவைகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி