"தனிநபர் வருமான வரி செலுத்தும் சதவீதம் குறைப்பு"
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக உரையாற்றிய போது ,தனி நபர் செலுத்த வேண்டிய ஒரு இலட்சம் ரூபாவுக்கான வருமான வரி மட்டத்தை ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 6 சதவீத வரிக்கு உட்படும் வகையில் தனி நபர் வருமான வரியின் முதலாவது பிரிவை 500,000 ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,
மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100 வீத வரி விலக்கும் 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71 வீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு,
மாதாந்தம் 250,000 ரூபா வருமானம் பெறும் ஒருவரின் வரி 61 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
அத்தோடு, 300,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 47 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
350,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 25.5 சதவீதத்தால் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி