"வாகன இறக்குமதியில் பிற்போக்கு இறுதித் தீர்மானத்தை எட்டாத அநுர அரசு"
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் முதல் கட்டமாக டிசெம்பர் இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி தொடக்கத்தில் பேருந்துகள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் பிரசாத் மானகே ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி