"புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தில் தொடரும் சிக்கல்"
2024ம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரினால் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்கள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கான புள்ளிகளை இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ள நிபுணர் குழுவானது அதனுடன் தொடர்புபட்ட முழு விடயங்களையும் கருத்திற் கொள்ளாமல் அறிக்கையை தயாரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பிரச்சனைக்கு தீர்வாக பரீட்சையானது மீண்டும் நடாத்தப்பட வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் மனு மீதான விசாரணையை இன்றைய தினம் வரை ஒத்தி வைத்துள்ளனர்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி