"நள்ளிரவுடன் நிறைவடைகிறது பரீட்சை விண்ணப்ப கோரல்"
இந்த வருடத்திற்கான க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடையும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று இன்றைய தினத்திற்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி