"மீண்டும் மக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை"
எதிர்வருகின்ற 7ஆம் திகதி மீண்டும் வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி உருவாகப் போவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
இக் காற்று சுழற்சியானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் 9ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி