"2025 ல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிச்சயம். தொழில் அமைச்சரின் அறிவிப்பு"
எதிர்வரும் 2025ல் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று எமக்கு கூற முடியும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை.மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும்.
அதனால் சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அந்த விவரங்களை வரவு செலவுத் திட்டத்தில் தான் தாக்கல் செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி