"2025ம் ஆண்டு பாடசாலைகளுக்கான கல்வி செயற்பாடுகளுக்கான தவணை கால அட்டவணை"
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை கால அட்டவணை இன்று வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், முதல் தவணை மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக ஜனவரி 27ஆம் திகதி தொடங்கி மார்ச் 14ஆம் திகதி வரை நடைபெறும்.
இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1ம் திகதி முதல் 11ம் திகதி வரை நடைபெறும்.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறும் .
இரண்டாம் தவணை மே 14 முதல் ஆகஸ்ட் 7 வரை நடாத்தப்படும்.
மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களாக நடைபெறும்
இதன் முதல் கட்டம் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும்,
இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி