"20% உயர்ந்த உணவுப் பொருட்களின் விலைகள்"
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 3 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20% ல் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு தாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுத் தருவதாக கூறியிருந்தனர் . இருப்பினும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மாஃபியாவிற்கான தீர்வை இதுவரையில் அரசாங்கம் வழங்க தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி