"ஒத்திவைக்கப்பட்டது உயர்தர பரீட்சைகள் "
தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது எனவும், குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி