"டிஜிட்டல் மயமாகப் போகும் அரச சேவைகள்"
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கல் விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில், அரச சேவையினை செயற்திறன்மிக்கதும் வெளிப்படைத்தன்மையுடையதாகவும் ஏற்படுத்துவதற்கு அரசு சேவையானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணத்தை கேந்திர மத்திய நிலையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயத்தை உருவாக்க அரசு கவனம் செலுத்திவருவதாகவும், தொழில்நுட்ப கல்வியை கட்டியெழுப்புவதுடன் அதற்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பாக தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி