"ஐந்தாம் தரப்புலமை பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்பட்டது"
நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று வினாக்கள் மாத்திரமே கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து மீண்டும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை இடம்பெறாது எனவும் , வெளியான அம்மூன்று வினாக்களுக்கான புள்ளிகளை வழங்குவதற்கு இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முழுமையான வினாத்தாள் வெளியிடப்பட்டதாகக் கூறி சில பெற்றோர்கள் , செய்தியாளர் சந்திப்புகளை நடாத்தியது மட்டுமல்லாமல் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி