"குறைக்கப்பட்டன எரிபொருள்களின் விலைகள்"
மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தத்திற்கேற்ப இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாகவும்,
377 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,
ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமுமில்லை.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி