Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாடசாலை பெண் மாணவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு

 "பாடசாலை பெண்  மாணவர்கள் தொடர்பாக  சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு"

பாடசாலை பெண்  மாணவர்கள் தொடர்பாக  சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு


களுத்துறையிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் எச். பி. வி தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை தொடர்பாக  முறையான நடைமுறையின் கீழ், சுகாதார அமைச்சு  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,குறித்த மாணவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை வழங்கியதன் பின்னர், அவர்கள் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


 மேலும் இலங்கை பெண்களிடையே காணப்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஒன்று, அதனை  தடுப்பதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான வழி HPV தடுப்பூசியாகும்,  இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது, அது மட்டுமல்லாமல்  உலக சுகாதார நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ளது, என்றும்  HPV தடுப்பூசி தொடர்பில் மக்கள் நம்பிக்கையைப் பேணுமாறும் சுகாதார அமைச்சு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

close