"மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை விவகாரம்"
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு பதுளை மாவட்டத்தில் பரீட்சைக்காக தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர், மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின், முதலாம் பகுதி வினாத்தாளில் இருந்து பரீட்சைக்கு முன்பதாகவே 3 வினாக்கள் கசிந்திருந்தது நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில்,
அந்த மூன்று வினாக்களுக்குமான புள்ளிகளை வழங்குவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி