"பிரியாவிடையோடு பிரிந்த ஆசிரியையின் உயிர்"
பிடபெத்தர மெதேரிபிடிய பாடசாலையில் சுமார் 5 வருடங்களாக கடமையாற்றிய ஆசிரியை ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் வைபவம் முடிந்து தன் கணவருடன் வீடு திரும்பிய போது அக்குரஸ்ஸ, சியம்பலாகொட, பிடபெத்த வீதியில் வைத்து அவர்கள் பயணித்த மோட்டார் வண்டியின் மீது சொகுசு வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவததை அடுத்து விபத்துக்குள்ளான 28 வயதான பாக்யா பொரலெஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் ஆகியோரை பிரதேச மக்கள் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ போலீசார் மேற்கொண்டு வருவதுடன் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி