"தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை நிலையங்களுக்கான அறிவிப்பு"
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீடசையில் 3 ,23,879 மாணவர்கள் நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி பரிட்சைக்கு தோற்ற உள்ளனர்.
இதன்படி செப்டம்பர் 15 ஆம் திகதி (காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரையான ) காலப்பகுதிக்குள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பத்தில்,
பரிட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்,
பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல்,
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளல்,
போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் ஆதரவாளர்களிடமும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி