Ticker

6/recent/ticker-posts

Ad Code

தண்டனைக்குள்ளாகப் போகும் அரச உத்தியோகஸ்தர்கள் புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

 "தண்டனைக்குள்ளாகப் போகும் அரச உத்தியோகஸ்தர்கள் புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு"


தண்டனைக்குள்ளாகப் போகும் அரச உத்தியோகஸ்தர்கள் புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு



இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான 25 மாவட்டங்களிலும் இருந்து நேரடியாக ஜனாதிபதியினால் 10 பேர் என்ற வகையில் 250  இரகசிய கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் .


தொடர்ந்து இவர்கள் மக்களோடு மக்களாக கலந்து செயல்படுவதுடன் கீழ்வரும் வகையில் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் 48 மணித்தியாலங்களுக்குள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி சட்டத்திற்கும்  வேலைத்தள அமைப்பிற்கும் புறம்பாக அடிமட்ட உத்தியோகத்தர்களை பழிவாங்கும் மேலதிகாரிகள்,


அரச அலுவலகங்களில்  30 நிமிடங்களுக்கு மேலாக சேவையை வழங்காமல் தேவையற்ற இழுத்தடிப்பு செய்யும் அரச உத்தியோகஸ்தர்கள்,


அலுவலகமொன்றிலிருந்து அல்லது பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு  14 நாட்களுக்குள் பதிலளிக்காத அரச உத்தியோகத்தர்கள்.


சேவை பெறுநர்களை ஒருமையில் மரியாதையின்மையுடன் நடத்தும் அதிகாரிகள்,


வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை கடிந்து பேசும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள்,


அரசு வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பங்கள்,


அரச பாடசாலைகளில் பாடசாலை நேரத்தில் தனியார்  வகுப்புக்கள் நடத்தும் பாடசாலை ஆசிரியர்கள்'


வெற்றிலை பாக்கு தரித்து அரச பேருந்தில் பயணிப்போர் மற்றும் பொது இடங்களில் வெற்றிலையை உமிழ்வோர்,


மதுபோதையில் பொது இடங்களில்  நின்று குழப்பம் விளைவிப்போர் மற்றும் தூஷண வார்த்தைகளை கொட்டுவோர்,


போக்குவரத்து விதிமீறலுக்காக இலஞ்சம் வாங்குகின்ற பொலிசார் மற்றும்  போக்குவரத்து விதிகளை மீறும் பொலிசார்,


.


அரச பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காமல் பணத்தை பெறும் நடத்துநர்கள்,


போக்குவரத்து விதிகளை பின்பற்றாது கவனயீனமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள்,


அரச அலுவலகங்களில் கடமை நேரத்தில் கடமையை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள்,


போன்ற 100 சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் அரசு உத்தியோகஸ்தர்கள்,


 அரசு வளங்களை முறைக்கேடான முறையில் பயன்படுத்தியமை மற்றும் அரசுக்கு எதிராக செயல்பட்டமை போன்ற குற்றங்களின் கீழ் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments

Ad Code

close