"இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வரும் கருத்தரங்குகள் மற்றும் வினாத்தாள் விநியோகம்"
2024ம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரிட்சை இம்மாதம் 15ஆம திகதி இடம்பெறவிருக்கும் நிலையில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பது மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளை நடத்துவது என்பன இன்று நள்ளிரவு 11 மணியளவோடு தடை செய்யப்பட்டுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தனிநபர் ஒருவரோ, அல்லது நிறுவனமோ மீறி செயல்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, பொலிஸ் தலைமையகத்திலோ அல்லது பரீட்சை திணைக்களத்திலோ முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி