"புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் ஆணையத்தின் அறிவிப்பு"
இவ்வாண்டு நடைபெறுகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 323,879 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களது பரிட்சைக்காக 2,849 பரீட்சை நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளதாகவும்,
நேற்று முதல் நாடு முழுவதும் உள்ள ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இரண்டு பகுதிகளைக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளே முதலில் வழங்கப்பட்டு இது காலை 9.30 முதல் 10.45 வரை நடைபெறும்.
அதன் பின்பு முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்பட்டு 12.15 வரை நடைபெறும் எனவும், மாணவர்கள் அனைவரும் பரீட்சைக்கு தேவையான அனைத்து சாதனங்களையும் தயார்படுத்திக் கொண்டு பரீட்சைக்கு முகம் கொடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி