"அரச ஊழியர்களுக்கான வாகனங்களுக்கு அனுமதி"
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் கடந்த 5 வருடங்களாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 75,000 வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் இன்னும் இறக்குமதி செய்யப்படாத வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி அனுமதி பத்திரத்தில் கைச்சாத்திடுவார் என பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கும், உலக வங்கி மற்றும் நன்கொடையாளர் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி