"அடிப்படை சம்பள உயர்வு"
இதுவரை காலமும் வழங்கி வந்த தனியார் துறைக்கான குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாயில் இருந்து 17,500 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,
சகல விதமான மீளாய்வு நடவடிக்கைகளைப் பின்பற்றிய பின்னர், இத் திருத்தமானது கடந்த செப்டம்பர் 3ம் திகதி அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிலையில்,
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 11ம் திகதி அன்று கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்றைய தினம் கையொப்பமிட்டுள்ளதை அடுத்து இது தொடர்ந்து இம்மாதம் முதல் அமுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி