Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாடசாலைகளுக்கு விடுமுறை

"பாடசாலைகளுக்கு விடுமுறை"




2024 ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களாக  தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 24ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால. ஜோபியஸ்  தெரிவித்துள்ளார். 


 அதனடிப்படையில் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரைக்கும்,


 பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20ம்  திகதிகளிலும், 


ஏனைய வாக்களிப்பு நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு 20ம் திகதியும் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Post a Comment

0 Comments

Ad Code

close