"பாடசாலை மாணவர்களின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து"
சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு பாடசாலை முன் வாயிலின் அருகே பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதால் 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பேருந்தானது மாணவர்களை ஏற்றி செல்வதற்காக வந்த பேருந்து என்றும், அது பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு பேருந்து எனவும் அந்த செய்தி ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை அந்நாட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி