"கல்வி அமைச்சராக மாறிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்"
கொழும்பில் உள்ள பிரபல தனியார் பாடசாலை ஒன்றின் மாணவன் 2ம் தவணைப் பரீட்சையில் இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? என்று வினவப்பட்டிருந்த வினாவிற்கு இலங்கையின் கல்வி அமைச்சர் ஜோசப் ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளார்.எனினும் அந்த மாணவனின் பதில் பலரை மகிழ்வித்துள்ளது.
ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவரான ஜோசப் ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவை விட அதிகமாக தோன்றுகிறார் என்பதனால் குறித்த மாணவன் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
அது மட்டுமன்றி அந்த வகுப்பில் அநேக மாணவர்கள் சரியாக விடை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி