"தபால் மூல வாக்களிப்பிற்கான அறிவிப்பு"
2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 4,5,6ஆம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் நிலையில்,
இம்முறை 712,318 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் .
மேலும் செப்டம்பர் மாதம் இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் விநியோகமானது 95% நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் இராணுவ தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி