"2024 புலமை பரிசில் பரீட்சைக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு"
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைகள் 2,649 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.
அதன் அடிப்படையில் முதலில் பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி தொடக்கம் 10.45 மணிவரையிலும், பின்பு முதலாம் பாகம் காலை 11.15 மணி தொடக்கம் 12.15 மணிவரையிலும் இடம் பெற உள்ளது.
இதுவரையிலும் பரீட்சைகளுக்கான பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாகவும் சென்று உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் மாணவர்களின் பதிவேடு பாடசாலைகளின் அதிபர்களுக்கு தோற்றவுள்ள வருகைப் சம்பந்தப்பட்ட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி