"15 வயது மாணவியின் உயிரைப் பறித்த கோர விபத்து"
கடந்த மாதம் 27 ஆம் திகதி பிபில-மொனராகல பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் சிக்குண்டு படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவ்விரு மாணவர்களில் 15 வயது நிரம்பிய துலாஷி கெஷாலா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி