"இளைஞனின் வயிற்றிலிருந்துஅகற்றப்பட்ட உலோகங்கள்"
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞனை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து வைத்தியர்கள் குறித்த இளைஞனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் அகற்றினர்.
மேலும் இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில் ,நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது எனவும் தற்பொழுது அவரது நிலைமை சீராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி