"புலமை பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம்"
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பின்படி ,
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில், புள்ளிகள் வழங்கப்படும் போது பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகள் மாத்திரமன்றி 30 வீத புள்ளிகள் 04 ,05 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் அதனை முறையாக மதிப்பீடு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதுடன் அவ்விடயம் பாடசாலை சபை மூலம் கண்காணிப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி