"கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளான பாடசாலை மாணவன்"
கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் தெரியவருவதாவது,
காயமடைந்த மாணவன் பாடசாலை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்நத சந்தர்ப்பத்தில் பிலிமத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து மூன்று மாணவர்களினால் மாணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இதன் பின்னர், காயமடைந்த மாணவன் பிரதேசவாசிகளின் உதவியுடன் பேராதனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் குறித்த மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரனை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி