"அரச ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பிற்காக கட்டாயப்படுத்தப்பட்ட ஆவணங்கள்"
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, தனிநபர் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை, அல்லது சாரதி அனுமதிப்பத்திரம், அல்லது கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தேர்தல்கள் தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி