Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 "பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை"




சமகாலமாக குழந்தைகளுடைய உடலுக்கு  தீங்கு  விளைவிக்கக்கூடிய சவர்க்காரங்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுகின்ற சவர்க்காரங்களுக்கு  SLS  தரச் சான்றிதழ் பெறுவது அவசியம் இல்லை என்ற காரணத்தினால் இவ்வாறான மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.



நாட்டில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரிக்கின்ற பிரதான நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்படுகின்ற சவர்க்காரத்தினை நுகர்வோர் அதிகார சபை பரிசீலித்தபோது அதில் T F M பெறுமதி 63 ஆக காணப்பட்டது.


ஆனால் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் T F M 78 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம் .


இவ்வாறு தரம் இல்லாத சவர்க்காரங்களை பிரதானமான  ஏழு நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் இது பாரிய மோசடியாகும்  எனவும்,


 குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை சந்தையில் நுகரும்போது சரியானவற்றை சரியான முறையில் பார்த்து பெற்றுக் கொள்ளுமாறும் நுகர்வோர் அதிகார சபை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close