"பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை "
இன்று முதல் இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுப்பதால் நாட்டில் வெப்பமான சூழ்நிலை அதிகரித்து காணப்படும் .
எனவே தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காகப் போதியளவான நீரை பருகுமாறும், அதிகமான நீராகார உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
மேலும் அதிகரித்த வெப்பநிலையின் காரணமாக சிறுவர்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி