"தபால் திணைக்களத்தின் தபால் வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு"
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி