"தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் மானியங்கள் "
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் மானியங்கள் என்பன எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியின் பின்னரே வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மானியங்களையும், நிவாரணங்களையும் தற்போதைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் தேர்தல் காலம் முடியும் வரை யோசனைகளை முன்வைக்க முடியும்.
எனினும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி வரையில் அவற்றை நடைமுறைபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி