Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை

"ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை"




இலங்கை நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21.09.2024 அன்று இடம்பெறவுள்ளது. 


வாக்களிக்கும் முறை


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலானது மிகுந்த சவால் மிக்க தேர்தலாகவும், விருப்பு வாக்கின் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலாகவும் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைவரும் தங்களுக்கான விருப்பு வாக்கினையும் பயன்படுத்தலாம்.

ஒருவர் 1, 2, 3 என மூன்று வாக்குகளை வெவ்வேறுபட்ட மூன்று பேருக்கு அளிக்க முடியும்.


வாக்களிப்பு முறை  01

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் X என அடையாளம் இடலாம் அல்லது 1 என இலக்கம் இடலாம்.

பெயர் -            சின்னம்

பெயர் A             🏆   

பெயர் B              🪔      X அல்லது 1

பெயர் C              🏠

பெயர் D.             ✈️ 

பெயர் E              🚘

பெயர் F              🍼


X என அடையாளம் இட்டால் ஏனைய விருப்பு வாக்குகளை செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்தினால் அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.


வாக்களிப்பு முறை 02

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும் இன்னுமொருவருக்கு 2 எனவும் இலக்கமிட்டு இரண்டு வாக்குகளை அளிக்க முடியும்.

பெயர் -         சின்னம்

பெயர் A            🏆

பெயர் B             🪔

பெயர் C             🏠     1

பெயர் D            ✈️

பெயர் E             🚘

பெயர் F             🍼   2



வாக்களிப்பு முறை 03

ஒருவர் தான் விரும்பிய ஒருவரின் பெயருக்கு நேரே உள்ள சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டியில் 1 எனவும், இன்னுமொருவருக்கு 2 எனவும், இன்னும் ஒருவருக்கு 3 எனவும் இலக்கமிட்டு மூன்று வாக்குகளை அளிக்க முடியும்.

பெயர் - சின்னம்


பெயர் A    🏆     1

பெயர் B     🪔 

பெயர் C    🏠      2

பெயர் D    ✈️  

பெயர் E     🚘

பெயர் F    🍼     3





இவற்றைத் தவிர வேறு ஏதாவது வகையில் அளிக்கப்படுகின்ற வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக கருதப்படும். சந்தர்ப்பங்கள் கீழ் வருமாறு

     1.     X என அடையாளம் இட்டு            பின்னர் விருப்பு வாக்குகளுக்கு 2, 3         ஆகிய இலக்கங்களை பயன்படுத்துதல்

2. மூன்று வாக்குகளையும் X என அடையாளம் இடுதல்

      3. மூன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை இடுதல்

Post a Comment

0 Comments

Ad Code

close