Ticker

6/recent/ticker-posts

Ad Code

நிர்வாணமாக கரை ஒதுங்கி ஆணின் சடலம்


"நிர்வாணமாக கரை ஒதுங்கி ஆணின் சடலம்"



 நிர்வாணமாகக் கரையொதுங்கிய ஆணின் சடலம் ஒன்று இன்று மொரட்டுவ, முறவத்த பிரதேச கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இரத்மலானை இராஜா மாவத்தை வீதியில் வசிக்கும் எஸ். செல்லவராஜ் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும்,


இவர் நேற்றைய தினம் பிற்பகல் இரத்மலான ரயில் நிலையத்திற்கு அண்மித்த கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர.

 குறித்த சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதுடன் மேலதிக பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

Post a Comment

0 Comments

Ad Code

close