"சுழலில் சுருண்ட இந்தியா 27 வருட கனவை நனவாக்கிய இலங்கை"
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 45 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டனர்.
ஏனைய வீரர்கள் ஒற்றை இழக்க ஓட்டங்களுடன் வெளியேற,
நிர்ணயிக்கப்பட்ட 249 என்ற வெற்றிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கையினுடைய அபாரமான சுழல் பந்து வீச்சிற்கு தனது அனைத்து விக்கட்டுகளையும் 138 ஓட்டங்களுக்கு இழந்தது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி