"2025-ல் புதிய பாடநூல் விநியோகம்"
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான இலவச பாடநூல்களை அச்சிடும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கு அமைவாக, குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அச்சிடுவதற்காக (2024.04.01) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
*
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி