"கஞ்சா பொதியுடன் சிக்கிய பாடசாலை மாணவன்"
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்கு கஞ்சா பொதியுடன் சென்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை 25ம் திகதி பதிவாகியுள்ளது.
குறித்த மாணவன் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும்போது, சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு செல்வதை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக அந்த மாணவனை பாடசாலை அதிபர் விசாரித்ததுடன், மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதோடு,
போலீசாருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார். போலீசார் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி