Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதிகரிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான சம்பளம்

"அதிகரிக்கப்பட்டது ஆசிரியர்களுக்கான

 சம்பளம்"



கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  அரசாங்கத்துக்கு எதிரான பணிபுரக்கணிப்பை மேற்கொண்டிருந்த நிலையில், 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 8 மற்றும் 9ம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்குமான யோசனைக்கு  அமைச்சரவையில்  நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதன் பிரகாரம் 3 (1)  தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 

2(11) தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும்,

 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும்

 சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.


மேலும் இன்றைய அமைச்சரவை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்,

 வழங்கப்படுகின்ற  பாராட்டுச் சான்றிதழ்கள் உரிய நாட்களில் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களின் தனிப்பட்ட கோப்புகளில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்


Post a Comment

0 Comments

Ad Code

close