"சிறுவனின் உயிரை காவு கொண்ட சிலிண்டர்"
காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் எஸ்.அனீஷன் என்ற மாணவன் இன்று மதியம் பாடசாலை வளாகத்தில் உள்ள கழிவறை பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற சந்தர்ப்பத்தில்
முறையற்ற விதத்தில் பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட காங்கிரிட் தாங்கியின் (cylinder) மீது ஏறி விளையாடிய சந்தர்ப்பத்தில்,
தாங்கி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மாணவன் படுகாயத்திற்கு உள்ளான நிலையில்,
1990 அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணம் அடைந்து உள்ளார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி