"அரசு ஊழியர்களின் விடுமுறைகள் குறைப்பு"
வருடத்திற்கு 42 நாட்கள் ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுளது.
இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை நாட்களை 15 நாட்களாகவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடுத்தோடு எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 1000 ரூபாவால் உயர்த்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி