"புதிதாக வழங்கப்படவுள்ள 5,500 ஆசிரியர் நியமனங்கள்"
புதிதாக 5,500 ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள போதும், இது தொடர்பில் நிலவும் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அது தாமதமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி