"பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க பரிந்துரை"
பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன் அதிகரிக்க இணக்கம் எட்டி, அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபா வரை அதிகரிக்கும் வகையிலான கூட்டு உடன்படிக்கையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி