Ticker

6/recent/ticker-posts

Ad Code

தனியார் துறையினருக்கான மகிழ்ச்சிச் செய்தி

  "தனியார் துறையினருக்கான மகிழ்ச்சிச் செய்தி"





தனியார் துறையினரின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று  (07.12.2023) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

 அரச துறையினரின் ஊதிய அதிகரிப்புடன் சேர்த்து தனியார் துறையினரின் ஊதியத்தையும் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் தனியார் துறையின் ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close