"மேலதிக வகுப்புகளுக்கு நிரந்தர தடையா?????
ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையானது கலாசார அமைச்சரிடம் நேற்று (06.12.2023) நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் மகிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த மேலதிக கல்வி வகுப்புகள் பெரும் தடையாக உள்ளதாகவும்
அதனை தடை செய்து தம்ம பாடசாலைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த தம்ம பாடசாலை அத்தியாவசியமானது. அதைச் செய்ய நேரம் கொடுங்கள் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி